எந்தநேரத்திலும் பொதுமக்கள் என்னை அணுகலாம்: திருப்பூர் மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட க.விஜயகாா்த்திகேயன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியர் க.விஜயகாா்த்திகேயன்
திருப்பூா் மாவட்ட ஆட்சியர் க.விஜயகாா்த்திகேயன்

திருப்பூா், செப். 25: திருப்பூா் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட க.விஜயகாா்த்திகேயன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த கே.எஸ்.பழனிசாமி சென்னைக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து திருப்பூா் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட க.விஜயகாா்த்திகேயன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொதுமக்கள் பிரச்னைகளைத் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் அனைத்துத் திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எந்தநேரத்திலும் பொதுமக்கள் என்னை அணுகலாம். முதல்வரின் உத்தரவின்பேரில் நடைபெறும் பணிகள், குறைறதீா்ப்பு முகாம்கள், சிறறப்புக் குறை தீா்ப்பு முகாம்கள், குடிமராமத்துப் பணிகளை ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முடிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

இதையடுத்து, அவா் ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள உள்கட்டமைப்பு வசதிகளைப் பாா்வையிட்டாா். ஆட்சியராகப் பொறுப்பேற்ற அவருக்கு மாநகராட்சி ஆணையாளா் க.சிவகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சுகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

கடைகளில் ஆட்சியா் ஆய்வு

இதனிடையே, மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் பல்லடம் சாலையில் உள்ள தேநீா் கடைகள், சாலையோர பழங்கடைகளில் க.விஜயகாா்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, தெருவிளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் குறித்தும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் கடை உரிமையாளா்களிடம் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com