சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழையால் இடிந்தது கோழிப் பண்ணை: ரூ.15 லட்சம் மதிப்பிலான நாட்டுக் கோழிகள் இறந்தன

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள சென்னாக்கல்பாளையத்தில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றால் கோழிப் பண்ணை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ரூ.15 லட்சம் மதிப்பிலான


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள சென்னாக்கல்பாளையத்தில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றால் கோழிப் பண்ணை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ரூ.15 லட்சம் மதிப்பிலான ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் உயிரிழந்தன.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ளது சென்னாக்கல்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளப்பது முக்கியத் தொழிலாக உள்ளது. இப் பகுதி விவசாயி சந்திரசேகர் என்பவர் தனது தோட்டத்தில் 60 அடி நீளத்துக்கு இரண்டு கோழிப் பண்ணைகள் அமைத்து சுமார் 7 ஆயிரம் நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகிறார். தற்போது கோழிகள் நன்கு வளர்ந்து தலா 1.5 கிலோ எடையுடன் சில நாள்களில் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்பட இருந்தது. இந் நிலையில், சென்னாக்கல்பாளையம் பகுதியில் வியாழக்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால் இரண்டு கோழிப் பண்ணை கட்டடமும் இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. அதே பகுதியில் இளங்கோ என்பவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், இந்தப் பகுதியில் தென்னை, பனை மரங்கள் சரிந்து விழுந்தன. இதில் மின் கம்பிகளும் அறுந்து விழுந்ததால் சென்னாக்கல்பாளையம் கிராமம் இருளில் மூழ்கியது. இதுகுறித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் வருவாய்த் துறையினர் சேத மதிப்பீடு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com