தமிழக முதல்வரிடம் மனு அளித்த தொமுச நிர்வாகிகள்
By DIN | Published On : 29th September 2019 12:21 AM | Last Updated : 29th September 2019 12:21 AM | அ+அ அ- |

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து திருப்பூர் மாவட்ட தொமுச நிர்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனர்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் சரவணன் தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்தனர்.
அப்போது மின்வாரியத்தில் கேங்மேன் பதவியை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என மனு அளித்தனர். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்ததாக தொமுச நிர்வாகிகள் தெரிவித்தனர்.