Enable Javscript for better performance
மாட்டுச் சந்தை: ரூ. 38 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை- Dinamani

சுடச்சுட

    

    மாட்டுச் சந்தை: ரூ. 38 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

    By DIN  |   Published on : 29th September 2019 07:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kgm29red_2909chn_140_3

    kgm29red_2909chn_140_3

    காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே உள்ள பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மொத்தம் ரூ. 38 லட்சத்துக்கு விற்கப்பட்டன.

    பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 177 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் 90 மாடுகள் மொத்தம் ரூ. 38 லட்சத்துக்கு விற்கப்பட்டன. இதில், அதிக பட்சமாக ரூ. 74 ஆயிரத்துக்கு காங்கேயம் இன செவலைப் பசு விற்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai