அனைத்துத் தொழிலாளர்களுக்கும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்

திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் கூடுதல் போனஸ் தொகை வழங்க வேண்டும் என்று பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.


திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் கூடுதல் போனஸ் தொகை வழங்க வேண்டும் என்று பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் போனஸ் தொடர்பான சிறப்புப் பேரவைக் கூட்டம் ஊத்துக்குளி சாலையில் உள்ள அச்சங்க கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றது. 
இதற்கு பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் பெ.ராமசாமி தலைமை வகித்தார். இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்:
திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் மட்டுமின்றி பிரிண்டிங், எம்பிராய்டரிங், காம்பேக்டிங், ஜாப்ஒர்க், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் தொகையை தீபாவளிக்கு 20 நாள்களுக்கு முன்னதாக வழங்க வேண்டும். திருப்பூரில் வெளிமாவட்டத் தொழிலாளர்கள் அதிகம் வசித்து வருவதால் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் தீபாவளிக்கு இரு நாள்களுக்கு முன்னதாகவே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 பனியன் தொழிலாளர் சங்கச் செயலாளர் மு.மனோகரன், மதிமுக மாநகரச் செயலாளர் சு.சிவபாலன், பஞ்சாலை சங்க மாவட்டச் செயலாளர் மு.சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com