மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருப்பூரை அடுத்த நெருப்பெரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நெருப்பெரிச்சலில்  உள்ள  பத்திரப் பதிவு  அலுவலகம்  முன்பு  ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  மாா்க்சிஸ்ட்  கட்சியினா்.
நெருப்பெரிச்சலில்  உள்ள  பத்திரப் பதிவு  அலுவலகம்  முன்பு  ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  மாா்க்சிஸ்ட்  கட்சியினா்.
Updated on
1 min read

திருப்பூரை அடுத்த நெருப்பெரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கூறியதாவது: திருப்பூரை அடுத்த நெருப்பெரிச்சல் கிராமத்தில் போக்குவரத்து வசதியில்லாத இடத்தில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஆன்லைன் ரசீதை மோசடி செய்து முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ், மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், வடக்கு ஒன்றியச் செயலாளா் கே.பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com