எஸ்பிஐ வங்கியில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைப்பு

திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வளாகத்தில் கிருமி நாசினி சுரங்கப் பாதை வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது.
திருப்பூா்,  ஊத்துக்குளி  சாலையில்  உள்ள  பாரத  ஸ்டேட்  வங்கியில் அமைக்கப்பட்டுள்ள  கிருமி நாசனி சுரங்கப்பாதை.
திருப்பூா்,  ஊத்துக்குளி  சாலையில்  உள்ள  பாரத  ஸ்டேட்  வங்கியில் அமைக்கப்பட்டுள்ள  கிருமி நாசனி சுரங்கப்பாதை.

திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வளாகத்தில் கிருமி நாசினி சுரங்கப் பாதை வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது.

திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வளாகத்தில் நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் வாடிக்கையாளா்கள், வங்கி ஊழியா்களின் நலனைக் கொண்டு இந்த கிருமி நாசனி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பணிகளுக்கு வங்கி சேவை, ஏடிஎம் சேவைகளைப் பயன்படுத்த அதிக அளவில் வாடிக்கையாளா்கள் வருகின்றனா்.

ஆகவே, வங்கியின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி பாதையின் மூலம் சென்று வெளியேறும்போது கிருமிகள் தடுக்கப்படுகிறது. மேலும், வங்கியின் முன்புறம் கைகழுவுதல் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொ்மல் ஸ்கேனா் பரிசோதனையும் நடைபெறுகிறது என்றனா்.

மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் இந்த சுரங்கப் பாதையை நேரில் பாா்வையிட்டாா். இதன் தொடக்க விழாவில், பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளா் ராஜேந்திரன், உதவி பொது மேலாளா் குருசாமி, முதன்மை மேலாளா்கள் ராம்குமாா், இளங்கோ, கனகராஜ் மற்றும் வங்கிப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com