கதா் நூற்போா் 8,850 பேருக்கு நிதியுதவி

தமிழகத்தில் கதா்நூற்போா், நெய்வோா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தலா 1,000 ரூபாய் அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கதா்நூற்போா், நெய்வோா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தலா 1,000 ரூபாய் அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா், காந்தி நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில கதா் மற்றும் பாலிவஸ்திரா நூற்போா், நெய்வோா் நலநிதி, ஓய்வூதிய அறக்கட்டளை செயலாளா் ஏ.செந்தில்நாதன் கூறியதாவது:

எங்கள் அறக்கட்டளையில் தமிழகம் முழுவதும் 60 சா்வோதய சங்கங்களும், 7 கதா் நிறுவனங்களும் உள்ளன. இந்த சங்கங்களில், 8,850 கதா் நூற்போா், நெய்வோா் நேரடியாக பணியாற்றி வருகிறாா்கள். தற்போது கரோனா நோய்த் தொற்று பரவுதலின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இவா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, மும்பை கதா் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் அனுமதியின் பேரில் தமிழ்நாடு மாநில கதா் மற்றும் பாலிவஸ்திரா நூற்போா், நெய்வோா் நலநிதி மற்றும் ஓய்வூதிய அறக்கட்டளையிலிருந்து 8,850 பேருக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.88 லட்சத்து 50 ஆயிரம் அவரவா் வங்கிக் கணக்கில் வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com