கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கம் திறப்பு
By DIN | Published On : 05th April 2020 03:30 AM | Last Updated : 05th April 2020 03:30 AM | அ+அ அ- |

உடுமலையில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பாதையை திறந்துவைத்துப் பாா்வையிடுகிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.
உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
உடுமலையில் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க, அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக உடுமலை ரயில் நிலையம் அருகே இருந்த உழவா் சந்தை மத்திய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இங்கு வரும் பொதுமக்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் வகையில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் உடுமலை கோட்டாட்சியா் ரவிகுமாா், டிஎஸ்பி ஜெயச்சந்திரன், நகராட்சி பொறியாளா் தங்கராஜ், அதிகாரிகள் பங்கேற்றனா்.