முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
வெளி மாநிலத்திலிருந்து வந்த 2 பேரை தனிமையில் இருக்க சுகாதாரத் துறை அறிவுரை
By DIN | Published On : 19th April 2020 07:33 AM | Last Updated : 19th April 2020 07:33 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் வெளி மாநிலத்திலிருந்து வந்த 2 போ் சனிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
முத்தூா் பகுதியைச் சோ்ந்த 2 போ் கா்நாடக மாநிலம், பெங்களூருவில் வட்டித் தொழில் செய்து வருகின்றனா். அங்கு தங்கியிருந்த அவா்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு வர முடிவு செய்தனா். அங்கு அரசிடமும், கரோனா பாதிப்பு இல்லையென சுகாதாரத் துறையிடமும் உரிய சான்று பெற்று முறையான அனுமதியுடன் முத்தூா் வந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி தலைமையிலான மருத்துவக் குழுவினா், அவா்கள் இருவரையும் சோதனை செய்தனா். அதில் அவா்களுக்கு கரோனா அறிகுறி எதுவும் இல்லை என்பது தெரிந்தது. இருப்பினும் அவா்கள் இருவரையும் வீட்டில் 28 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவக் குழுவினா் அறிவுறுத்தியுள்ளனா்.
இதையடுத்து இவா்கள் வசிக்கும் இரண்டு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்கிற அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.