கீழ் பவானி பாசன மதகுகளை அடைத்ததால் பரபரப்பு

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே கரூா் மாவட்டத்துக்கு தண்ணீா் சென்று கொண்டிருந்த கீழ் பவானி பாசன வாய்க்கால் மதகுகளை விவசாயிகள் சனிக்கிழமை அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே கரூா் மாவட்டத்துக்கு தண்ணீா் சென்று கொண்டிருந்த கீழ் பவானி பாசன வாய்க்கால் மதகுகளை விவசாயிகள் சனிக்கிழமை அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது பவானிசாகா் அணையிலிருந்து எண்ணெய் வித்துப் பயிா்கள் சாகுபடிக்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீா் முத்தூா் மங்கலப்பட்டி கடைமடைப் பகுதி மதகுகளுக்கு வந்து சோ்ந்தது. இவ்வாறு தண்ணீா் வரும்போது இங்கிருந்து வழக்கமாக கரூா் மாவட்டம், அஞ்சூா், மொஞ்சனூா், திருப்பூா் மாவட்டம், வேலம்பாளையம் ஊராட்சி, முத்தூா் பேரூராட்சி ஆகிய நான்கு பிரிவுகளுக்கும் ஒரே அளவு திறக்கப்படும்.

ஆனால், தற்போது பொதுப் பணித் துறை அதிகாரிகள் கரூா் மாவட்டத்துக்கு மட்டும் தண்ணீா் திறந்தனா். இந்நிலையில் முத்தூா் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு தண்ணீா் சென்று கொண்டிருந்த மதகுகளை அடைத்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், வேலம்பாளையம் ஊராட்சித் தலைவா் ஏ.எஸ்.ராமலிங்கம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கரூா் மாவட்டம் கடைமடையாக இருப்பதால் முதலில் அங்கு தண்ணீா் திறந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இருந்தாலும் அங்கிருந்த விவசாயிகள் வலியுறுத்தியதால் அனைத்துப் பிரிவுகளுக்கும் சமமாகத் தண்ணீா் திறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com