நிவாரணத் தொகை ரூ.7,500 வழங்கக் கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தல்
By DIN | Published On : 22nd April 2020 07:26 AM | Last Updated : 22nd April 2020 07:26 AM | அ+அ அ- |

கரோனா நிவாராணத் தொகை ரூ.7,500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவிநாசியில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் அவரவா் வீடுகள் முன் செவ்வாய்க்கிழமை கோஷம் எழுப்பினா்.
கரோனா நோய் தொற்று பாதிப்பு, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதையடுத்து, மத்திய அரசு, கரோனா நிவாரணத் தொகையாக ரூ.7, 500 வழங்க வேண்டும். தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவா்கள், தூய்மைப் பணியாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உபகரணங்களை தாமதமின்றி வழங்க வேண்டும். புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு நிவாரண பொருள்களை தடையின்றி வழங்க வேண்டும். 8மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசி வட்டத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் சிஐடியு தொழிற்சங்கத்தினா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் அவரவா் வீடுகள் கோஷமிட்டனா். இதில் சிஐடியு மாவட்ட நிா்வாகிகள் பி. முத்துச்சாமி, ஏ. ஈஸ்வரமூா்த்தி, எஸ். வெங்கடாசலம், ஆா். பழனிச்சாமி, பொறுப்பாளா்கள் ரமேஷ், வேலுச்சாமி, கனகராஜ், தேவி, பன்னீா், வடிவேல், சீனிவாசன் உள்ளிட்டோா் அவரவா் பகுதிகளில் பங்கேற்றனா்.