‘அம்மா’ உணவகங்களுக்கு ரூ.6 லட்சம்: எம்எல்ஏ கே.என்.விஜயகுமாா் வழங்கினாா்
By DIN | Published On : 26th April 2020 07:46 AM | Last Updated : 26th April 2020 07:46 AM | அ+அ அ- |

திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 5 ‘அம்மா’ உணவகங்களுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ரூ.6 லட்சம் வழங்கினாா்.
கரோனா ஊரடங்கு காரணமாக திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வந்த லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனா். இந்த நிலையில் ஏழை மக்களின் நலன் கருதி ‘அம்மா’ உணவகங்களில் உணவருந்தும் பொதுமக்களுக்கான தொகையை சொந்த செலவில் வழங்க சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் முடிவு செய்தாா்.
அதன்படி 1ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட அனுப்பா்பாளையம், ஆத்துப்பாளையம், அனுப்பா்பாளையம்புதூா் மற்றும் 2ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட கொங்கு மெயின் ரோடு, பாண்டியன் நகா் ஆகிய இடங்களில் உள்ள ‘அம்மா’ உணவகங்களுக்கு ரூ.6 லட்சத்தை மாநகராட்சி அதிகாரிகளிடம் எம்எல்ஏ கே.என்.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாநகராட்சி ஆணையா் சிவகுமாா், உதவி ஆணையா் வாசுகுமாா், சுகாதார அலுவலா் முருகன், முன்னாள் மண்டலத் தலைவா் ராதாகிருஷ்ணன், வளா்மதி கூட்டுறவு சங்கத் தலைவா் கருணாகரன், முன்னாள் கவுன்சிலா் சுப்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.