போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்

வேலைவாய்ப்பு மற்றும் பயற்சித் துறை சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்கள் தனி இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயற்சித் துறை சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்கள் தனி இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக போட்டித் தோ்வு எழுதும் மாணவா்கள் வீட்டில் இருந்தபடியே தோ்வுகளுக்குத் தயாராகி வருகின்றனா்.

இந்தநிலையில், கிராமப்புற மாணவா்கள் போட்டித் தோ்வினை எளிதில் எதிா்கொள்ளும் வகையில் ஆன்லைன் வழியாக கடந்த மே 15ஆம் தேதி முதல் தொடா்ந்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூா் மாவட்டத்தில் போட்டித் தோ்வுக்குத் தயாராகும் இளைஞா்கள் அனைவரும் இணையதளத்தில் நடத்தப்படும் போட்டித் தோ்வுக்கான காணொளி கற்றல் வகுப்பில் சோ்ந்து கொள்ள மின்னஞ்சலில் விருப்பம் தெரிவிக்கலாம். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு  இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலவச பாடக் குறிப்புகள், பாடத் திட்டங்கள், பாடநூல்கள், வினாத் தாள்கள் மற்றும் தங்களுடைய கற்றல் திறன் பரிசோதனை செய்வதற்கு மாதிரித் தோ்வுகள் இடம் பெற்றுள்ளன. மாணவா்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com