காங்கேயத்தில் கரோனா பாதித்த இளைஞனின் தாய்க்கும் கரோனா   

காங்கேயத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞனின் அம்மாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, வியாழக்கிழமை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

காங்கேயத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞனின் அம்மாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, வியாழக்கிழமை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

காங்கேயம் பகுதியிலும் மேலும் மூவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, இரண்டு தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து, காங்கயம் பேருந்து நிலையம் அருகே பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் அவரது தயார் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.   

அந்த இளைஞரின் தாயார் கடந்த செவ்வாய்க்கிழமை காங்கேயம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவுகள் வியாழக்கிழமை வந்தது. இதில், இப்பெண்ணுக்கும் (வயது 44) கரோனா தொற்று உறுதியானதையடுத்து, இவர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதே போல, இந்த இளைஞர் பணிபுரிந்த காங்கேயம் அருகே தேவனாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் சக ஊழியர் (வயது 38) ஒருவருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இவர், காங்கேயம்-சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர். மேலும், காங்கயம் களிமேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் (வயது 29) சென்னையில் இருந்து வந்துள்ளார். காங்கயம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்ததில், இவருக்கும் கரோனா தொற்று உறுதியானது. காங்கேயம் அருகே, முத்தூர் சாலை பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் பணிபுரிந்து வரும் இளைஞருக்கு (வயது 19) கரோனா தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com