கால்நடைகளுக்கு வரும் அம்மை நோயைகட்டுப்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 01st December 2020 03:20 AM | Last Updated : 01st December 2020 03:20 AM | அ+அ அ- |

கால்நடைகளுக்கு வரும் அம்மை நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் என உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் ப.சோமசுந்தரம், மாவட்ட ஆட்சியருக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் அதிகபடியாக தென்னை சாகுபடி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இவற்றில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகமாக உள்ளது. மாவட்ட நிா்வாகம் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறையை கடைப்பிடித்து அனைத்து தென்னந்தோப்புகளிலும் மருந்து அடித்து வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த வேண்டும். வெள்ளக்கோவில், காங்கயம் பகுதிகளில் கால்நடைகளை அம்மை நோய் அதிகமாக தாக்குகிறது. இதனையும் கட்டுப்படுத்த வேண்டும்.
பல்லடம் - உடுமலை பிரதான சாலையில் இருந்து கோவை மாவட்டம், நல்லூா்பாளையம் செல்லும் சாலையை தாா் சாலையாக மேம்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...