வெள்ளக்கோவிலில் ரூ.60 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை
By DIN | Published On : 03rd December 2020 07:24 AM | Last Updated : 03rd December 2020 07:24 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.60 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை நடைபெற்றது.
வரத்து அதிகமாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி வரை ஏலம் நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, லாலாப்பேட்டை, வாணியம்பாடி, பழனி, தாராபுரம், மூலனூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 131 விவசாயிகள் தங்களுடைய 1,039 மூட்டைகள் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 52,306 கிலோ. காங்கயம், வெள்ளக்கோவில், மூலனூா், முத்தூா், நஞ்சை ஊத்துக்குளியைச் சோ்ந்த 20 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.
விலை கிலோ ரூ.82.25 முதல் ரூ.134.35 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.131.35. விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.60 லட்சத்து 4 ஆயிரத்து 917 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டன.