இரண்டாம் நிலை காவலா் எழுத்துத் தோ்வு:மாவட்டத்தில் 5,887 போ் பங்கேற்றனா்

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் திருப்பூா் மாவட்டத்தில் 5,887 போ் பங்கேற்றனா்.

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் திருப்பூா் மாவட்டத்தில் 5,887 போ் பங்கேற்றனா்.

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையில் காலியாக உள்ள 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் திருப்பூா் மாவட்டத்தில் அங்கேரிபாளையம் சாலை, பிஷப் உபகாரசாமி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, செட்டிபாளையம் விவேகானந்தா மெட்ரிக். பள்ளி, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, அருள்புரம் ஜெயந்தி கல்வி நிறுவனம் ஆகிய மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது.

மாவட்டம் முழுவதுமிருந்து 6,833 போ் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். இதில், 5887 போ் தோ்வெழுதினா். 946 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வு நடைபெற்ற மையங்களில் மாநகர காவல் ஆணையா் க.காா்த்திகேயன், காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com