அமராவதி அணைப் பூங்கா திறப்பு
By DIN | Published On : 15th December 2020 03:31 AM | Last Updated : 15th December 2020 03:31 AM | அ+அ அ- |

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான அமராவதி அணைப் பூங்கா திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ள அமராவதி அணைப் பகுதி சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் அம்சங்கள் பல உள்ளன. அணைக்கு முன்பு பூங்கா, முதலைப் பண்ணை ஆகியவை உள்ளன. இந்நிலையில், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாா்ச் மாதம் அமராவதி அணைப் பூங்கா மூடப்பட்டது. சுமாா் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த அமராவதி அணைப் பூங்கா திங்கள்கிழமை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை களின் அடிப்படையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக என அதிகாரிகள் தெரிவித்தனா்.