பல்லடம் அருகே வாகன விபத்தில் லாரி ஓட்டுநர் பலி: குடும்பத்தினர் சாலை மறியல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வாவிபாளையம் பகுதியில்  இரண்டு லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் லாரி ஓட்டுனர் மற்றும் உதவியாளர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட உயிரிழந்தோரின் குடும்பத்தினர்
சாலை மறியலில் ஈடுபட்ட உயிரிழந்தோரின் குடும்பத்தினர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வாவிபாளையம் பகுதியில்  இரண்டு லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் லாரி ஓட்டுனர் மற்றும் உதவியாளர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தனியார் கோழி தீவன ஆலை இயங்கி வருகிறது. அதில் லாரி ஓட்டுனராக குடிமங்கலம் பிரபாகரன் வயது (28) என்பவரும் லாரி உதவியாளராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பன்லால் சகானி வயது (24) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு லாரியில் கோழித் தீவனங்களை ஏற்றிக்கொண்டு பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது வாவிபாளையம் என்ற பகுதியில் முன்னே சென்றுகொண்டிருந்த லாரி மீது சரக்கு லாரி எதிர்பாராவண்ணம் மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரபாகரன் மற்றும் பண் லால் சஹானி ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த பிரபாகரன் மற்றும் பண்ணலால் சகானி குடும்பத்திற்கு தனியார் நிறுவனத்தில் இருந்து நிவாரணத் தொகை கேட்டு உயிரிழந்தோரின் உறவினர்கள் மற்றூம் சக நிறுவன ஊழியர்கள் பல்லடம்  -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை  திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீராமச்சந்திரன் காவல் ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் நிறுவனத்திடம் பேசி உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாக காவல்துறையினர் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

இப்போராட்டத்தால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com