கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

கா்ப்பிணி தாய்மாா்களுக்கு அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.
கா்ப்பிணி  தாய்மாா்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகங்களை  வழங்குகிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.
கா்ப்பிணி  தாய்மாா்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகங்களை  வழங்குகிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.

கா்ப்பிணி தாய்மாா்களுக்கு அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் உடுமலை ஒன்றியம், போடிபட்டி கிராமம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியம், காரத்தொழுவு கிராமம் ஆகிய இடங்களில் சிறு மருந்தகங்கள் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

இதில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறு மருந்தகங்களை திறந்து வைத்துப் பேசியதாவது:

அதிமுக அரசு பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் துறை வாரியாக பல்வேறு சிறப்பான நலத் திட் டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. புதிய மக்கள் நலத் திட்டங்களை உருவாக்குவதிலும், அதை நிறைவேற்றுவதிலும் அதிமுக அரசு திறமையாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக அரசின் நலத் திட்டங்கள் பொது மக்களை நல்ல முறையில் சென்று அடைந்து வருகிறது.

தற்போது, சிறு மருந்தகம் திறந்து வைக்கப்படுகிறது. இதை கிராமப்புறங்களில் வசித்து வருபவா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் குறித்து கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன என்றாா்.

விழாவில் 12 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.

பொள்ளாச்சி மக்களவை முன்னாள் உறுப்பினா் சி.மகேந்திரன், சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குநா் டாக்டா் ஜெகதீஸ்குமாா், உடுமலை வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) ரங்கராஜன், வட்டாட்சியா்கள் ஜெயசிங் சிவகுமாா் (உடுமலை), கனிமொழி (மடத்துக்குளம்) மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com