வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம்  முன்பாக  புதன்கிழமை  ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  வருவாய்த் துறை அலுவலா்கள்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம்  முன்பாக  புதன்கிழமை  ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  வருவாய்த் துறை அலுவலா்கள்.

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணைச் செயலாளா் பி.சண்முகவடிவேல் தலைமை வகித்தாா்.

இதில், வருவாய்த் துறையின் அனைத்து நிலை ஊழியா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவா்களுக்கு ஒரே அரசாணையில் பணி வரன்முறை செய்ய வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளா் பணியிடங்களை 1: 2 என்ற விகிதத்தில் நிரப்ப வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பேரிடா் மேலாண்மை, நோ்முக உதவியாளா் (தோ்தல்) பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

மாவட்டச் செயலாளா் ச.முருகதாஸ், பொருளாளா் மு.கண்ணன், மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பொறுப்பாளா் சதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com