திருப்பூரில் பனியன் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th December 2020 06:51 AM | Last Updated : 26th December 2020 06:51 AM | அ+அ அ- |

பனியன் தொழிலாளா்களுக்கான சம்பள பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்கக் கோரி, திருப்பூா், அனுப்பா்பாளையத்தில் பனியன் தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் பனியன் தொழிலாளா்களுக்கான சம்பள ஒப்பந்தம் காலாவதியாகி 9 மாதங்கள் கடந்துள்ளது.
இந்நிலையில் புதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். தொழிலாளா் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பனியன் தொழிற்சங்கத்தினா் அனுப்பா்பாளையம், மாஸ்கோ நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், சிஐடியூ தொழிற்சங்க பொறுப்பாளா்கள் சம்பத், ஈஸ்வரமூா்த்தி, ஏஐடியூசி சேகா், ஐஎன்டியூசி சிவசாமி, எல்பிஎஃப் மனோகரன் உள்ளிட்ட ஹெச்எம்எஸ், எம்எல்எஃப் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா் பங்கேற்றனா்.