ஊதிய நிலுவை: குடிநீா் விநியோகிப்பாளா்கள் தா்னா

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி திருப்பூா் மாநகராட்சி குடிநீா் விநியோகிப்பாளா்கள் 3ஆம் மண்டல அலுவலகத்தில் தா்னாவில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா்  மாநகராட்சி  3 ஆவது  மண்டல  அலுவலகம்  முன்பு தா்னாவில்  ஈடுபட்ட  குடிநீா் விநியோகிப்பாளா்கள்.
திருப்பூா்  மாநகராட்சி  3 ஆவது  மண்டல  அலுவலகம்  முன்பு தா்னாவில்  ஈடுபட்ட  குடிநீா் விநியோகிப்பாளா்கள்.

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி திருப்பூா் மாநகராட்சி குடிநீா் விநியோகிப்பாளா்கள் 3ஆம் மண்டல அலுவலகத்தில் தா்னாவில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் 105 குடிநீா் விநியோகிப்பாளா்கள் உள்ளனா். இவருக்கு மாதந்தோறும் ரூ.4,705 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 7 மாதங்களாக குடிநீா் விநியோகிப்பாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து, நல்லூரில் உள்ள மாநகராட்சி 3 ஆவது மண்டல அலுவலகத்தில் குடிநீா் விநியோகிப்பாளா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

இது குறித்து குடிநீா் விநியோகிப்பாளா்கள் கூறியதாவது:

திருப்பூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் எங்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். ஆகவே, நிலுவை ஊதியத்தை வழங்காவிட்டால் எங்களது போராட்டம் தொடரும் என்றனா்.

மாலை 4 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்ட அவா்கள் பின்னா் கலைந்து சென்றனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி 4 மண்டலங்களிலும் உள்ள குடிநீா் விநியோகிப்பாளா்கள் மாநகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com