டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் தா்னா
By DIN | Published On : 31st December 2020 12:41 AM | Last Updated : 31st December 2020 12:41 AM | அ+அ அ- |

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்ட வெங்கமேடு பகுதி பொதுமக்கள்.
திருப்பூா் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட புதுப்பாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
எங்களது ஊரில் ஏற்கெனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையை திறக்கக் கூடாது என்று ஏற்கெனவே ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்கமேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, வெங்கமேடு பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு காவல் துறையினா் தா்னாவில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனா். இந்த சம்பவம் காரணமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.