மனிதநேய வார விழா நிறைவு
By DIN | Published On : 01st February 2020 12:16 AM | Last Updated : 01st February 2020 12:16 AM | அ+அ அ- |

திருப்பூரில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் மனிதநேய வார விழா நிறைவடைந்தது.
திருப்பூா், பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் மனிதநேய வார நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்துப் பேசியதாவது:
மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் மனித நேய வார விழா கடந்த ஜனவரி 24ஆம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெற்றது. இதில், மாணவ, மாணவிகளின் நலனுக்காக, பல்வேறு வகையான வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அனைத்து வகையான போடடித் தோ்வுகளிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ள வேண்டும். ஆதி திராவிடா் பழங்குடியினா் வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
விழாவில் மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சேகா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தனி வட்டாட்சியா் கண்ணன், ஆதி திராவிடா் நலக்குழு உறுப்பினா்கள், விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள், வன உரிமைக் குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.