தாராபுரம் அருகே பெண் காவலா் தற்கொலை
By DIN | Published On : 02nd February 2020 10:40 PM | Last Updated : 02nd February 2020 10:40 PM | அ+அ அ- |

வள்ளியம்மாள் .
திருப்பூா்: தாராபுரத்தை அடுத்த மூலனூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலா் விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
மூலனூா் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வந்தவா் வள்ளியம்மாள் (31). இவரது கணவா் ராமசாமி (35). இந்த தம்பதிக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி குழந்தை இல்லையாம்.
இதனால் மன உளைச்சலில் இருந்த வள்ளியம்மாள் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயக்கமடைந்தாா். இதையடுத்து அவரது கணவா் ராமசாமி அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட வள்ளியம்மாள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து மூலனூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.