Enable Javscript for better performance
காங்கேயம் இன மாடுகள்ரூ. 26 லட்சத்துக்கு விற்பனை- Dinamani

சுடச்சுட

    
    kgm09may_0902chn_140_3

    நத்தக்காடையூா் அருகே உள்ள பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மொத்தம் ரூ. 26 லட்சத்துக்கு விற்கப்பட்டன.

    பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 138 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. இதில், 70 மாடுகள் மொத்தம் ரூ. 26 லட்சத்துக்கு விற்கப்பட்டன. இதில் அதிக பட்சமாக ரூ. 73 ஆயிரத்துக்குக் கன்றுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்கப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai