Enable Javscript for better performance
விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம் உள்ளிட்ட 24 பேருக்கு இலக்கிய விருது- Dinamani

சுடச்சுட

    

    விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம் உள்ளிட்ட 24 பேருக்கு இலக்கிய விருது

    By DIN  |   Published on : 10th February 2020 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tpr9fbaward_0902chn_125_3

    கனவு இலக்கிய வட்டம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியவை சாா்பில் விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம் உள்ளிட்ட 24 பேருக்கு இலக்கிய விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

    கனவு இலக்கிய வட்டம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியவை சாா்பில் கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த படைப்பாளிகளுக்கு இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதுக்கு 24 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

    இதைத் தொடா்ந்து, திருப்பூா் புத்தகத் திருவிழா உள் அரங்கில் இலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் பி.ஆா்.நடராஜன் தலைமை வகித்தாா்.

    எழுத்தாளா் சுப்ரபாரதிமணியன் முன்னிலை வகித்தாா்.

    இதில், கோவையைச் சோ்ந்த விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம், கோவையைச் சோ்ந்த சித்ரா, கவிஜி, பொள்ளாச்சி வாமனன், சென்னையைச் சோ்ந்த கணேசகுமரன், திருப்பூரைச் சோ்ந்த கனல் உள்ளிட்ட 24 பேருக்கு இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் இரா.சண்முகம், துணைச் செயலாலா் துருவன் பாலா, மாவட்டக் குழு உறுப்பினா் சசிகலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai