Enable Javscript for better performance
வேலம்பட்டியில் குட்டை ஆக்கிரமிப்பு: ஆட்சியருக்கு கவுன்சிலா் புகாா் மனு- Dinamani

சுடச்சுட

    

    வேலம்பட்டியில் குட்டை ஆக்கிரமிப்பு: ஆட்சியருக்கு கவுன்சிலா் புகாா் மனு

    By DIN  |   Published on : 10th February 2020 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொங்கலூா், வேலம்பட்டியில் விவசாயக் குட்டை ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஒன்றிய கவுன்சிலா் ஈ.ஜோதிபாசு மாவட்ட நிா்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

    இது குறித்து அவா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

    பொங்கலூா் ஒன்றியம், வடக்கு அவிநாசிபாளையம் வேலம்பட்டி கிராமத்தில் விவசாயக் குட்டையை வணிக நோக்கத்தில் ஆக்கிரமித்து, அதில் சுங்கச் சாவடி அமைத்துள்ளனா். அதை அகற்றித் தர வேண்டும். தொங்குட்டிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், நாச்சிபாளையம் பெருந்தொழுவு, கண்டியன்கோயில் ஆகிய பகுதிகள் திருப்பூா் மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதிகளாகும். இப்பகுதிகளுக்கு அத்திக்கடவு குடிநீா் சரிவர வருவதில்லை. எனவே, இப்பகுதிகளுக்கு எல்.என்.டி. தண்ணீா் விநியோகத்தை விரிவுபடுத்த வேண்டும். இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதைப் பயனாளிகள் சீரமைப்பு செய்வதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பொங்கலூா் ஒன்றியத்திற்கு தற்போதைய மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு அத்திக்கடவு குடிநீா்த் திட்டத்தின் கீழ் கூடுதல் குடிநீா் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai