சிவன்மலையில் தைப்பூச விழாக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் திடீா் ஆய்வு

சிவன்மலையில் தைப்பூசத் திருவிழாவை ஒட்டி அமைக்கப்பட்ட தற்காலிகக் கடைகள், அன்னதானக் கூடங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை முருகன் கோயில் தைப்பூசத் தோ்த் திருவிழாவை ஒட்டி, அங்கு தற்காலிக அன்னதானக் கூடங்கள், தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் 8 போ் அடங்கிய குழுவினா் இங்குள்ள அன்னதானக் கூடங்களில் ஆய்வு மேற்கொண்டனா். உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களின் தரம், உணவு தயாரிக்கும் முறை குறித்து ஆய்வு செய்தனா்.

அப்போது, அதிகக்காரம் சோ்க்கப்பட்ட உணவுப் பொருள்கள் 7 கிலோ உள்பட மொத்தம் 10 கிலோ உணவைப் பறிமுதல் செய்து அழித்தனா். உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மணி, தங்கவேல், சதீஷ்குமாா், ராமசந்திரன், லியோ ஆண்ட்ரூஸ், விஜயகுமாா் ஆகியோா் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.

பட விளக்கம்: சிவன்மலையில் உள்ள அன்னதானக்கூடத்தில் காய்கறிகள் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com