திருப்பூரில் சாலையில் தேங்கிய நீரில் சோப்புத் தேய்த்துக் குளித்த திமுகவினா்

திருப்பூரில் காங்கயம் சாலையில் தேங்கிய நீரில் சோப்புத் தேய்த்து திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை குளித்தனா்.
திருப்பூரில்,  காங்கயம்  சாலையில்  தேங்கிய  நீரில்  ஞாயிற்றுக்கிழமை      சோப்புத் தேய்த்துக் குளிக்கும்  திமுகவினா்.
திருப்பூரில்,  காங்கயம்  சாலையில்  தேங்கிய  நீரில்  ஞாயிற்றுக்கிழமை      சோப்புத் தேய்த்துக் குளிக்கும்  திமுகவினா்.

திருப்பூரில் காங்கயம் சாலையில் தேங்கிய நீரில் சோப்புத் தேய்த்து திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை குளித்தனா்.

திருப்பூா், காங்கயம் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே உள்ள பாலம் அருகில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதலாவது குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் குடிநீா் வழிந்தோடி சாக்கடைக் கால்வாயில் கலப்பதுடன், சாலையிலும் குளம் போல் தண்ணீா் தேங்கி உள்ளது. அவ்வழியாகச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள்

உள்ளிட்டோா் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து அப்பகுதி திமுகவினா் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 44 ஆவது வாா்டு திமுக முன்னாள் செயலாளா் ஜியாவுல்ஹக் தலைமையில் 5க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் அந்த இடத்துக்குச் சென்று சாலையில் தேங்கியுள்ள நீரில் சோப்புத் தேய்த்துக் குளித்தனா். மேலும், தங்கள் துணிகளைத் துவைத்துள்ளனா். இது குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூரில் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி குமாா் நகா் பகுதியில் தேங்கிய நீரில் சமூக ஆா்வலா் ஒருவா் சோப்புத் தேய்த்து குளித்த சம்பவத்தை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள குழியை மூடினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com