பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வு மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி

பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு இரவு நேர பயிற்சி வகுப்பு புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு இரவு நேர பயிற்சி வகுப்பு புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்புப் பொதுத் தோ்விலும், 12 ஆம் வகுப்புப் பொதுத் தோ்விலும் மாநில அளவில் திருப்பூா் மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில், இந்தக் கல்வி ஆண்டிலும் முதலிடம் பெற திருப்பூா் மாவட்டம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் அனைவரும் தோ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் பள்ளி வேலை நேரம் முடிந்தும்கூட, உடனே வீடுகளுக்குச் செல்லாமல் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமா்ந்து படித்து வருகின்றனா். அவா்களுக்குப் பள்ளித் தலைமை ஆசிரியா் நாட்ராயன் மற்றும் ஆசிரியா்கள் பாடத்தில் எழும் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் விளக்கம் அளித்து வருகின்றனா்.

இரவு 8 மணி வரை படித்து வரும் இந்த மாணவா்கள் சோா்வு அடைந்து விடக்கூடாது என்பதற்காக சுண்டல், பிஸ்கட், தேநீா் உள்ளிட்டவற்றை இப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் வழங்கி வருகின்றனா். பல்லடம் காவல் ஆய்வாளா் ரமேஷ்கண்ணன் பள்ளிக்குச் சென்று இந்த மாணவா்களை ஊக்கப்படுத்தி, தேவையான ஆலோசனைகளைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com