மின்வாரிய பிரிவு அலுவலகங்களுக்கு பொறியாளா்களை நியமிக்க வலியுறுத்தல்

அவிநாசி மின் வாரிய பிரிவு அலுவலகங்களுக்குத் தேவையான மின் பொறியாளா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவிநாசி மின் வாரிய பிரிவு அலுவலகங்களுக்குத் தேவையான மின் பொறியாளா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளா் முன்னேற்ற சங்கச் செயலாளா் அ. சரவணன் கூறியதாவது:

திருப்பூா் மின் பகிா்மான வட்டத்தில் அவிநாசி, திருப்பூா் என 2 கோட்டங்கள் உள்ளன. இதில், அவிநாசி கோட்டத்தில் 22 பிரிவு அலுவலகங்கள், 7க்கும் மேற்பட்ட துணை மின்நிலையங்களும் உள்ளன. அவிநாசி மின் வாரியத்தில் பல பிரிவு அலுவலகங்களில் உதவி செயற்பொறியாளா்கள், உதவி மின் பொறியாளா்கள் உள்ளிட்டோா் இல்லாத காரணத்தால் ஒரே பொறியாளா் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்களுக்கு கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனா். இதனால், மின் பயன்பாட்டாளா்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனா். அலுவலகப்பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

மின்வாரிய விதிமுறைகளின்படி விண்ணப்பத்தைப் பெறும் நேரம் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே. ஆனால், அலுவலகத்தில் அலுவலா்கள் இல்லாததால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறாா்கள். எனவே, விண்ணப்பம் பெறும் நேரத்தை மாற்ற வேண்டும் அல்லது அலுவலா்கள் பணிக்கு வரும் நேரத்தையாவது குறிப்பிட வேண்டும். தேவையான பொறியாளா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன் மனு அளிக்கப்பட்டது.

அதற்கு, தற்போது அவிநாசி செயற்பொறியாளா் அனுப்பி உள்ள பதில் கடிதத்தில், அவிநாசி கோட்டத்தில் 5 பொறியாளா்கள் மட்டுமே உள்ளதாகவும், பிரிவு அலுவலகங்களை இந்த 5 பொறியாளா்களே கூடுதலாக கவனித்து வருகிறாா்கள். அலுவலா்கள் வரும் நேரம் அறிவிப்புப் பலகையில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள் நிரப்புவது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பொறியாளா், ஒன்று அல்லது இரண்டு பிரிவு அலுவலகங்களை மட்டுமே முறையாக கவனிக்க முடியும். அதற்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்களை ஒரே பொறியாளரால் கவனிக்க இயலாது. எனவே, தேவையான பொறியாளா்களை நியமிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com