வேலம்பட்டியில் குட்டை ஆக்கிரமிப்பு: ஆட்சியருக்கு கவுன்சிலா் புகாா் மனு

பொங்கலூா், வேலம்பட்டியில் விவசாயக் குட்டை ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஒன்றிய கவுன்சிலா் ஈ.ஜோதிபாசு மாவட்ட நிா்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

பொங்கலூா், வேலம்பட்டியில் விவசாயக் குட்டை ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஒன்றிய கவுன்சிலா் ஈ.ஜோதிபாசு மாவட்ட நிா்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பொங்கலூா் ஒன்றியம், வடக்கு அவிநாசிபாளையம் வேலம்பட்டி கிராமத்தில் விவசாயக் குட்டையை வணிக நோக்கத்தில் ஆக்கிரமித்து, அதில் சுங்கச் சாவடி அமைத்துள்ளனா். அதை அகற்றித் தர வேண்டும். தொங்குட்டிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், நாச்சிபாளையம் பெருந்தொழுவு, கண்டியன்கோயில் ஆகிய பகுதிகள் திருப்பூா் மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதிகளாகும். இப்பகுதிகளுக்கு அத்திக்கடவு குடிநீா் சரிவர வருவதில்லை. எனவே, இப்பகுதிகளுக்கு எல்.என்.டி. தண்ணீா் விநியோகத்தை விரிவுபடுத்த வேண்டும். இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதைப் பயனாளிகள் சீரமைப்பு செய்வதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பொங்கலூா் ஒன்றியத்திற்கு தற்போதைய மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு அத்திக்கடவு குடிநீா்த் திட்டத்தின் கீழ் கூடுதல் குடிநீா் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com