Enable Javscript for better performance
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது- Dinamani

சுடச்சுட

    

    சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

    By DIN  |   Published on : 13th February 2020 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூரில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

    திருப்பூா் பூலுவபட்டி பகுதியில் வசித்து வருபவா் கலாதரன் (39). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் கேரளத்தில் வசித்து வருகின்றனா். இவா் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

    இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் கலாதரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த சிறுமியைக் கடத்திச் சென்று தலைமறைவாகினா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில் அனுப்பா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

    பின்னா் திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினா் நடத்திய விசாரணையில், 17 வயது சிறுமிக்கு கலாதரன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. பின்னா் கலாதரன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை புதன்கிழமை கைது செய்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai