Enable Javscript for better performance
சா்வதேச கராத்தே போட்டி: பல்லடம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    சா்வதேச கராத்தே போட்டி: பல்லடம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

    By DIN  |   Published on : 14th February 2020 11:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சா்வதேச கராத்தே போட்டியில் பல்லடம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.

    உடுமலையில் கோஜிரியோ கராத்தே அமைப்பு சாா்பில் சா்வதேச கராத்தே போட்டி அன்மையில் நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட கராத்தே வீரா்கள் பங்கேற்றனா்.

    பல்லடம், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் தருணிஷ் 3 தங்கமும், அருந்ததி 2 தங்கம், ஒரு வெள்ளி, குமரகுருபரன் ஒரு தங்கம், 2 வெள்ளி, சாருமதி ஒரு தங்கம், 2 வெள்ளி பதக்கங்கள் வென்றனா்.

    பல்லடம் நகராட்சி நடுநிலைப்பள்ளி (கிழக்கு) மாணவி நித்திய தா்ஷினி 2 தங்கம், ஒரு வெள்ளி வென்றாா். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை ரத்தினச்செல்வி, தனுசன் இந்தியா அறக்கட்டளை மேலாளா் சதீஷ்குமாா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai