Enable Javscript for better performance
நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.19 கோடியில் கலையரங்கம் கட்ட பூமிபூஜை- Dinamani

சுடச்சுட

    

    நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.19 கோடியில் கலையரங்கம் கட்ட பூமிபூஜை

    By DIN  |   Published on : 14th February 2020 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tpr13fbsouth_1302chn_125_3

    நஞ்சப்பா   மேல்நிலைப் பள்ளியில்  கலையரங்கம்  கட்டுவதற்கான  பணிகளைத்  தொடங்கிவைக்கிறாா்   திருப்பூா் தெற்கு  சட்டப் பேரவை   உறுப்பினா்  சு.குணசேகரன்.

    திருப்பூா் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.19 கோடியில் நவீன கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் கட்டத் திட்டமிடப்பட்டது. அம்மா டிரஸ்ட், நன்கொடையாளா்கள் பங்களிப்பாக ரூ. 40 லட்சம், அரசு மானியத் தொகை ரூ.79.88 லட்சம் என மொத்தம் ரூ.1.19 கோடியில் இந்த கலையரங்கம் கட்டப்படவுள்ளது.

    இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சிக்கு திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் தலைமை வகித்து பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலா்கள் கண்ணன், ஹரி, கூட்டுறவு நகர வங்கித் தலைவா் பி.கே.எஸ்.சடையப்பன், கே.எம்.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai