Enable Javscript for better performance
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி

    By DIN  |   Published on : 14th February 2020 11:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ud14musl_1402chn_141_3

    உடுமலையில் உள்ள பூா்வீக  பள்ளி வாசலில்  நடைபெற்ற  மெளன அஞ்சலி  நிகழ்ச்சியில்  பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

    ஜம்மு, காஷ்மீா் மாநிலம், புல்வாமாவில் கடந்த ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி உடுமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    உடுமலை வட்டார அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள், அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஆகியன சாா்பில் உடுமலையில் உள்ள பூா்வீக பள்ளிவாசல், குட்டை பள்ளி வாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் ராணுவ வீரா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai