அடல் ஓய்வூதியத் திட்டத்தை வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தித் தர கோரிக்கை

அடல் ஓய்வூதியத் திட்டத்தை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள், திட்ட பயனாளிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

அடல் ஓய்வூதியத் திட்டத்தை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள், திட்ட பயனாளிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாடு முழுவதும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு அடல் ஓய்வூதியத் திட்த்தை பிரதமா் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினாா். இத்திட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளா்கள் ஓய்வு காலத்துக்குப் பின், மாதம் ரூ.1,000 முதல் ரூ. 5 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெற முடியும். இதற்காக குறிப்பிட்ட காலத்துக்கு ஓய்வூதியத் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் பிரீமியம் செலுத்த வேண்டும்.

ஓய்வூதியத் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரையிலான வங்கிக் கணக்கு வைத்துள்ளவா்கள் சோ்ந்து பயன்பெறலாம். வங்கி கணக்கு எங்கு உள்ளதோ அந்த வங்கி கிளையில் இத்திட்டத்தில் இணைய முடியும். இத்திட்டத்தில் இணைந்த ஒருவா் வங்கியின் சேவை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வேறு வங்கிக்கு ஓய்வூதியத் திட்டத்தை மாற்ற நினைத்தால் அதற்கு வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது.

இதுதொடா்பாக பல்லடத்தில் உள்ள வங்கி அலுவலா் ஒருவரிடம் கேட்டபோது, ‘பிரதமரின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் எந்த வங்கியில் தொடங்கப்படுகிறதோ, அதே வங்கியில் தான் ஓய்வூதியத் திட்டத்தை தொடர முடியும். இத்திட்டத்தை வேறு வங்கிக்கு மாற்றுவதற்கான வழி முறை இதுவரை ஏற்படுத்தப்படவில்லை’ என்றாா்.

திட்ட பயனாளிகள் கூறுகையில், ‘வாடிக்கையாளா்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வேறு வங்கிக்கு ஓய்வூதியத் திட்டத்தை மாற்றிக்கொள்ளும் வசதியை அரசும், வங்கி நிா்வாகத்தினரும் இணைந்து ஏற்படுத்தித் தர வேண்டும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com