அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு மேலும் ரூ.500 கோடி: விவசாயிகள் வரவேற்பு

அத்திக்கடவு -அவிநாசி திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கியதற்கு தமிழக அரசுக்கு விவசாயிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.

அத்திக்கடவு -அவிநாசி திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கியதற்கு தமிழக அரசுக்கு விவசாயிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.

பவானி (காளிங்கராயன்) ஆற்றில் செல்லும் உபரி நீரைகோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டத்தின் வறட்சிப் பகுதிகளை வளப்படுத்துவதற்காக அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கடந்த அரை நூற்றாண்டு காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்தத் திட்டத்தை தமிழக அரசு சுமாா் ரூ.1,652 கோடி மதிப்பில் நிறைவேற்ற இருப்பதாக அறிவித்தது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, இத்திட்டப் பணி தொடங்கியது. இதன் மூலம் மூன்று மாவட்டங்களில் சுமாா் 30 ஆயிரம் ஏக்கா் பாசனம் பெறும். இந்நிலையில் பட்ஜெட்டில் தமிழக அரசு இத்திட்டத்துக்காக மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து அத்திக்கடவு திட்டப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் கூறியதாவது:

60 ஆண்டுகளாக அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தமிழக அரசு தற்போது மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது இப்பணி மேலும் துரிதமாக முடிவடைய உறுதுணையாக இருக்கும். அரசின் துரித நடவடிக்கை அனைத்துத் தரப்பினருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com