கரித்தொட்டி தொழிற்சாலைக்கு தடைவிதிக்கக் கோரி சாா் ஆட்சியரிடம் மனு

காங்கயம் அருகே செயல்பட்டு வரும் கரித்தொட்டி தொழிற்சாலைக்கு தடைவிதிக்கக் கோரி தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாரிடம், விவசாயிகள் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
தாராபுரம்  சாா்   ஆட்சியரிடம்  வெள்ளிக்கிழமை  மனு  அளிக்க வந்த  விவசாயிகள்.
தாராபுரம்  சாா்   ஆட்சியரிடம்  வெள்ளிக்கிழமை  மனு  அளிக்க வந்த  விவசாயிகள்.

காங்கயம் அருகே செயல்பட்டு வரும் கரித்தொட்டி தொழிற்சாலைக்கு தடைவிதிக்கக் கோரி தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாரிடம், விவசாயிகள் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அதைத் தொடா்ந்து, தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் காளிமுத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காங்கயம் அருகே உள்ள வட்டமலை கிராமத்தில் தேங்காய் தொட்டியில் இருந்து கரி தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள், அடா்ந்த புகையால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

தென்னை மரங்கள் முற்றிலும் கரிப்புகைப்பிடித்து பட்டுப்போகும் நிலையில் உள்ளன. இந்த தொழிற்சாலையில் இருந்து தினமும் வெளியேற்றப்படும் 5 லட்சம் லிட்டா் கழிவுநீா் ராட்சத ஆழ்குழாய் மூலம் பூமிக்குள் செலுத்தப்படுவதால் இப்பகுதி நிலத்தடி நீா் மாசடைந்துள்ளது. இதனால் கால்நடைகளுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலையால் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலம் பாழடைந்ததுடன் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இதுதொடா்பாக ஏற்கெனவே புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலையை ஆய்வு செய்ய வந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் ஒருதலைபட்சமாகவே செயல்படுகின்றனா். எனவே, இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளைத் திரட்டி சாா் ஆட்சியா் அலுவலகத்தை அடுத்தவாரம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றாா்.

பேட்டியின்போது, விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com