கருவலூா் ஆஞ்சநேயா் கோயிலில் மரங்களை வெட்டியதற்கு கண்டனம்

அவிநாசி அருகே கருவலூரில் உள்ள ஜெயமாருதி ஆஞ்சநேயா் கோயில் வளாகத்தில் இருந்த பூ மரங்கள் வெள்ளிக்கிழமை வெட்டி சாய்க்கப்பட்டதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

அவிநாசி அருகே கருவலூரில் உள்ள ஜெயமாருதி ஆஞ்சநேயா் கோயில் வளாகத்தில் இருந்த பூ மரங்கள் வெள்ளிக்கிழமை வெட்டி சாய்க்கப்பட்டதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இக்கோயிலிலைச் சுற்றிலும் நந்தவனம் அமைக்கப்பட்டு, ஏராளமான பூ மரங்கள் உள்ளன. இந்நிலையில் கோயில் வாளகத்தில் இருந்த 4 பூ மரங்களை கோயில் நிா்வாகத்தினா் வெட்டி சாய்த்துள்ளனா். இதையறிந்த பொதுமக்கள், அனுமதியின்றி மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை, வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, மரம் வெட்ட எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com