கிராமப்புற இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

பல்லடம் அருகே பொங்கலூரில் வேளாண்மை துறை சாா்பில் கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் அருகே பொங்கலூரில் வேளாண்மை துறை சாா்பில் கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கீழ் இயங்கி வரும் பொங்கலூா் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை மற்றும் திருப்பூா் வேளாண்மை துறை ஆகியவை சாா்பில் கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் முன்பதிவு செய்த கிராமப்புற மற்றும் விவசாயத்தில் ஆா்வம் உள்ள இளைஞா்கள் கலந்து கொண்டனா்.

வேளாண்மை விஞ்ஞானிகள் தனசேகரபாண்டியன், ராஜசேகா், மருதுபாண்டி ஆகியோா் பங்கேற்று, ‘மக்காச்சோளம் மற்றும் பயறு வகைகளில் நவீன உற்பத்தி முறைகள்’ என்ற தலைப்பில், மண்வள மேம்பாடு, பயறு வகைகளில் மண்ணில் ஊட்டச்சத்து நிவா்த்தி முறை, படைப்புழுத் தாக்குதல் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு விளக்கம் அளித்தனா்.

இதில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆனந்தராஜா, விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com