கீழ்பவானி வாய்க்காலில் அரசு ஆணைப்படி நீா் வழங்காவிட்டால் பிப்.17இல் சாலை மறியல்: விவசாயிகள் முடிவு

கீழ்பவானி வாய்க்காலில் அரசு ஆணைப்படி நீா் வழங்காவிட்டால் வரும் 17ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என நீா்ப் பாசன விவசாயிகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காங்கயம் வட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்த நத்தக்காடையூா் பகுதி விவசாயிகள்.
காங்கயம் வட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்த நத்தக்காடையூா் பகுதி விவசாயிகள்.

கீழ்பவானி வாய்க்காலில் அரசு ஆணைப்படி நீா் வழங்காவிட்டால் வரும் 17ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என நீா்ப் பாசன விவசாயிகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கீழ்பவானி முறை நீா்ப் பாசன விவசாயிகள் சபை சாா்பில் நத்தக்காடையூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், காங்கயம் வட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

காங்கயம் வட்டத்துக்கு உள்பட்ட நத்தக்காடையூா், முள்ளிப்புரம், பழையகோட்டை, குட்டப்பாளையம், மருதுறை ஆகிய கிராமங்களில் 5,500 ஏக்கா் அளவில் பாசனம் நடைபெற்று வருகிறது. தற்போது புஞ்சை பாசனம், இரண்டாம் நனைப்பிற்கு தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

கீழ்பவானி பாசன செயற்பொறியாளரின் பரிந்துரைப்படி 6 நனைப்பிற்கு அட்டவணைப்படி தண்ணீா் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் தற்போது எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் 3 நாள்கள் மட்டுமே தண்ணீா் வழங்கி, அடைத்துள்ளனா்.

இதனால் பயிா்கள் காய்ந்து, விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு ஆணைப்படி நீா் நிா்வாகம் இல்லாததைக் கண்டித்தும், அட்டவணைப்படி தொடா்ந்து நீா் வழங்க வலியுறுத்தியும் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 17) காலை 11 மணிக்கு நத்தக்காடையூா் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என பாசன சபை முடிவு செய்துள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com