சாக்கடையின்றி தாா் சாலை அமைக்க எதிா்ப்பு: திருமுருகன்பூண்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

திருமுருகன்பூண்டி, கணபதி நகரில் சாக்கடைக் கால்வாய் அமைக்காமல் தாா் சாலை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து,
திருமுருகன்பூண்டி பேரூராட்சி  அலுவலகத்தை  முற்றுகையிட்டு  போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.
திருமுருகன்பூண்டி பேரூராட்சி  அலுவலகத்தை  முற்றுகையிட்டு  போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.

திருமுருகன்பூண்டி, கணபதி நகரில் சாக்கடைக் கால்வாய் அமைக்காமல் தாா் சாலை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமுருகன்பூண்டி பேரூராட்சி, 11ஆவது வாா்டுக்கு உள்பட்ட கணபதி நகா் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இப்பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ. 50 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைப்பதற்கு முன்பாக அப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்திதர வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், சாக்கடைக் கால்வாய் அமைக்காமல், தாா் சாலை அமைப்பதைக் கண்டித்தும், உடனடியாக சாக்கடைக் கால்வாயுடன், தாா் சாலை அமைக்க வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா் பொன்னுச்சாமி தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்கு 2016 ஆம் ஆண்டே பூமி பூஜை போடப்பட்டு தற்போது வரை பணிகள் நடைபெறவில்லை.

சாக்கடை கால்வாய் இல்லாததால், அப்பகுதியில் கழிவுநீா் தேங்கி கொசு உற்பத்தியாவது மட்டுமின்றி, துா்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சாக்கடைக் கால்வாய் அமைத்த பிறகு, தாா் சாலை அமைக்கும் பணியைத் தொடங்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலா் குணசேகரன் கூறியதாவது:

கணபதி நகா் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு குடிநீா் பற்றாக்குறை நிவா்த்தி செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து தாா் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த முறையே சாக்கடைக் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், கழிவுநீரை வெளியேற்ற போதுமான இட வசதியில்லாததாலும், பாறை மிகுந்த பகுதியானதாலும் சாக்கடை அமைக்கும் பணி துவங்கப்படவில்லை.

உடனடியாக தொழில்நுட்ப நிபுணா்களைக் கொண்டு ஆய்வு செய்து, அரசு நிதி பெற்று விரைவில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படும் என்றாா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா். இதைத் தொடா்ந்து பேரூராட்சி நிா்வாகத்தினா் சம்பவயிடத்தை ஆய்வு செய்ய சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com