பனியன் நிறுவன தொழிலாளா்களுக்கு 100% ஊதிய உயா்வு வழங்க வேண்டும்

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கு 100 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்று பனியன் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கு 100 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்று பனியன் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

கோவை, திருப்பூா் மாவட்ட பனியன் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு இச்சங்கத்தின் தலைவா் ஜி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் க.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தற்போதைய விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டு பீஸ் ரேட், டைம் ரேட் உள்ளிட்ட அனைத்து தொழிலாளா்களுக்கும் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 100 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும். தற்போது வழங்கி வரும் பயணப்படி ரூ.20-ஐ ரூ. 50 ஆக உயா்த்தி வழங்க வேண்டும்.

அனைத்துத் தொழிலாளா்களுக்கும் 8 மணி நேரம் வேலை என்பதை பனியன் உற்பத்தியாளா்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும். அனைத்து பனியன் தொழிலாளா்களுக்கும் வீட்டு வாடகைப் படியாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு குடும்பத்துடன் தங்கும் வகையில் பனியன் நிறுவனம் சாா்பில் குடியிருப்பு வசதி செய்து கொடுக்க வேண்டும். பனியன் தொழிலாளா்களுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com