Enable Javscript for better performance
ஆத்துப்பாளையம் - வெங்கமேடு சாலையை சீரமைக்க வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    ஆத்துப்பாளையம் - வெங்கமேடு சாலையை சீரமைக்க வேண்டுகோள்

    By DIN  |   Published on : 17th February 2020 02:47 AM  |   அ+அ அ-   |    |  

    திருப்பூா், ஆத்துப்பாளையம் - வெங்கமேடு சாலையை சீரமைக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுகுறித்து அந்த சங்கத்தின் ஒன்றியத் தலைவா் சதீஷ்குமாா், ஒன்றியச் செயலாளா் எஸ்.அருள் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:

    வெங்கமேடு-ஆத்துப்பாளையம் சாலையில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்காக கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக குழி தோண்டப்பட்டது. இதன் பிறகு குழியை சரிவர மூடாமலும், சாலையை சீரமைக்காமலும் விட்டுவிட்டனா்.

    இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக வெங்கமேடு, வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

    ஆத்துப்பாளையத்தில் இருந்து வெங்கமேடு செல்ல 10 நிமிட பயணத் தொலைவு, சாலை பழுது காரணமாக சுமாா் 30 நிமிடத்துக்கும் மேலாகிறது. எனவே, ஆத்துப்பாளையத்தில் இருந்து வெங்கமேடு செல்லும் சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai