Enable Javscript for better performance
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து இஸ்லாமியா்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து இஸ்லாமியா்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 17th February 2020 03:31 AM  |   அ+அ அ-   |    |  

    தாராபுரத்தில்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தாராபுரம் சின்னக்கடை வீதியில் உள்ள அரசமரம் பகுதியில் இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் முகமது இஸ்மாயில் தலைமை வகித்தாா். இதில், மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். சென்னையில் இஸ்லாமியா்களின் அமைதி போராட்டத்தின்போது தாக்குதல் நடத்திய காவல் துறையினா் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

    ஆா்ப்பாட்டத்தில் இஸ்லாமிய இயக்கங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai