Enable Javscript for better performance
பழையகோட்டை மாட்டுச் சந்தை: ரூ.22 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை- Dinamani

சுடச்சுட

    

    பழையகோட்டை மாட்டுச் சந்தை: ரூ.22 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

    By DIN  |   Published on : 17th February 2020 02:46 AM  |   அ+அ அ-   |    |  

    kgm16may_1602chn_140_3

    பழையகோட்டை காங்கேயம் இன மாட்டுச் சந்தையில் ரூ.71 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட மயிலை வகைப் பசு.

    காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.22 லட்சத்துக்கு விற்பனையாகின.

    பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 138 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் 65 மாடுகள் மொத்தம் ரூ.22 லட்சத்துக்கு விற்பனையாகின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ. 71 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai